முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா அருகே பயிற்சியின்போது கடலில் விழுந்த போர் விமானம்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

பானாஜி - இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று பயிற்சியின்போது, கடலில் விழுந்தது. இதில் வீரர் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். விமானி உள்ளிட்ட 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்றுமுன்தினம் 2 வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவாவின் தென்மேற்கு பகுதியில், சுமார் 25 கடல் மைல் தொலைவில் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்தவர்கள் இரவு 10.08 மணிக்கு கடைசியாக பேசியுள்ளனர். அதற்குபின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. கட்டுபாட்டு அறையில் இருந்து ஆய்வு செய்த போது, விமானம் கடலில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது.

மீட்பு பணியில் 6 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. விமானத்தில் பயணம் செயதவர்களில் பயணம் செய்தவர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். விமானி மற்றும் மற்றொரு வீரரை மீட்கும் பணி நடந்து வருகிறது. விமானம் கடலுக்குள் விழுந்ததற்கான காரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து