முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக் தேசிய தின விழாவில் பங்கேற்ற வி.கே.சிங் பதவி விலக வலியுறுத்தல்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாகிஸ்தான் தின விழாவில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சி்ங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் தேசிய தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டார். இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த வி.கே.சிங், மத்திய அரசு ஆணையின்படி கலந்து கொண்டதாக தெரிவித்தார். பின்னர் வி.கே.சிங் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது, விருப்பமின்றி கடமையாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதாவது, பாகிஸ்தான் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முந்தைய மத்திய அமைச்சர்கள் மறுத்து விட்டனர். ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அறுவெறுப்பு அடைவதாக வி.கே. சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்பான அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டு, அறுவெறுப்பு அடைவீர்கள் என்றால், அவர் பதவி விலக வேண்டும் என மணீஷ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து