முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1.10 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை ஏலம்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளை விற்பதற்காக, மத்திய அரசால் கடந்த 19 நாள்களாக நடத்தப்பட்டு வந்த ஏலம் நிறைவடைந்தது. இதில் ரூ.1.10 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகள் ஏலம் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, அலைக்கற்றையை ஏலம் எடுத்தவர்களின் பட்டியம், அதில் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களை, சுப்ரீம் கோர்ட்டு அனுமதியைபெ பெற்ற பிறகே தொலைத் தொடர்புத் துறை வெளியிடவுள்ளது. இந்நிலையில், கடந்த 19 நாட்களாக நடைபெற்ற ஏலம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

மொத்தம் 4 வகையான அலைக்கற்றைகளுக்கு 115 சுறஅறுகளாக ஏலம் நடைபெற்றது. 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ் ஆகிய அலைக்கற்றைகள் தான் மிக அதிகப்படியாக லம் விடப்பட்டன. ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ், ஐடியா, உளஅளிட் நிறுவனங்களின் வசமிருக்கும் 22 உரிமங்கள் 2016ம் ஆண்டுடன் காலாவதியாகவுள்ள நிலையில், அவற்றுக்கு சேர்த்து ஏலம் நடத்தப்பட்டது. 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் ஆகிய 4 வகை அலைவரிசைகளில் மொத்தம் 380.75 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கான அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது.

ஏல ஒப்பந்தப் படி, 2100 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ் வகை அலைக்கற்றைகளை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் 33 சதவீத கட்டணத்தையும், 900 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ் வகை அலைக்கற்றைகளை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் 25 சதவீத கட்டணத்தையும் அடுத்த 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஐடியா, ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது பழைய உரிமங்கலை தக்கவைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டின.

ரிலையன்ஸ் ஜியோ, டாடா டெலிசர்வீசஸ், டெலிவிங்கஸ், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் புதிய உரிமங்களைப் பெற ஆர்வம் காட்டின என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து