முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரக வளர்ச்சி - ஊராட்சி துறையின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  .எஸ்.பி.வேலுமணி  தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சி துறையின் மாநில அளவிலான வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று  சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று  வாரியத்தில்  உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.  

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் (தாய்) திட்டம், ஊரக குடியிருப்பு திட்டங்களான முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம்,  """"தானே"" வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுதல், ஊரக சாலை பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் , தமிழ்நாடு  ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புது வாழ்வு திட்டம் மூலம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வாழ்வாதார நிதி வழங்குதல் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அமுத சுரபி நிதி வழங்குதல் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு பயிற்சிக்கு பின் வேலை வாய்ப்பு  மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலிவுற்றோர்களுக்காக வாழ்வாதார நிதி உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். 

இந்த நிதியாண்டில் எடுக்கப்பட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து செயல்படுத்தி, அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப்பணிகளையும் தரமானதாகவும், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்கவும், உரிய காலக் கெடுவிற்குள்ளும் மக்கள் பயன்பெறத்தக்க வகையில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், மக்களின் முதல்வர் ஜெயலலிதா , சட்டமன்ற விதி எண்110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டப்பணிகளையும்  விரைந்து  செயல்படுத்தி, காலதாமதமின்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என   அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   அறிவுரை வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் . ககன்தீப்சிங் பேடி, . கா.பாஸ்கரன், இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர்கள் , மகளிர் திட்டம் மற்றும் புது வாழ்வு திட்டம் கூடுதல் இயக்குநர்கள் கண்காணிப்பு பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து