முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் தபால் ஊழியர்கள் ஸ்டிரைக்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தபால் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். என்.எப்.பி.இ. கூட்டு இணைப்பு குழு சார்பில் 9 சங்கங்கள் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டன. ‘‘கோர் பேங்கிங்’’ திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்தும், தொழிற் சங்க உரிமைகளை பறிப்பது, காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதை கண்டித்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தபால் துறை ஊழியர்கள் போராட்டத்தால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகரங்களில் தபால் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கிராமப்புறங்களிலும் தபால் பட்டுவாடா பாதிக்கப்பட்டது.ஸ்பீடு போஸ்ட், டெபாசிட், தபால் பட்டுவாடா, மணியார்டர் ஆர்.எம்.எஸ். உள்ளிட்ட சேவைகள் நடைபெறவில்லை. பிற சங்கங்களைச் சேர்ந்த குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு தபால் அலுவலகங்கள் நேற்று செயல்பட்டன.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகப் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மற்ற இடங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் சேவை முடங்கியது.
தபால்கள் கட்டு கட்டாக தேங்கின. ரெயில்களில் கொண்டு செல்லக்கூடிய தபால் கட்டுகள் ரெயில் நிலையங்களில் தேங்கின. மணியார்டர்களை வினியோகம் செய்யக்கூடிய ஊழியர்கள் வராததால் அந்த பணியும் முற்றிலும் பாதித்தன.

இதுகுறித்து சங்கத்தின் கன்வீனர் ராமமூர்த்தி கூறியதாவது:–

கோர் பேங்கிங் திட்டத்தை தனியாருக்கு கொடுத்ததால் பல்வேறு பிரச்சினைகளை ஊழியர் தினமும் சந்தித்து வருகிறார்கள். நெட்ஒர்க் இல்லாமல் பல மணி நேரம் பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதை கண்டித்து தமிழகத்தில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் மணியார்டர், ஸ்பீடு தபால், தபால் பைகள் பார்சல் போன்றவை தேக்கம் அடைந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து