முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக வெயில்: வாகனங்களில் பெட்ரோல் முழுவதும் நிரப்பினால் ஆபத்து

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சென்னையில் லட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் உள்ளன. வேலைகளுக்கு செல்பவர்கள் அடிக்கடி பெட்ரோல் போடுவது சிரமம் என்பதால் ‘புல்டேங்க்’ நிரப்பி விடுவார்கள்.

பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் திறந்த வெளியில் கடும் வெயிலில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ‘புல்’ பெட்ரோல் இருந்தால் கடுமையான வெப்பம் காரணமாக டேங்க் வெடிக்கவும், தீ பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ‘புல்’ டேங்க் பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக அரை அல்லது முக்கால் டேங்க் பெட்ரோல் நிரப்பி மீதி காற்று நிரம்பி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.

சென்னையில் எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் பல வணிக வளாகங்களில் பார்க்கிங் திறந்த வெளியில் வெயிலில்தான் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாகனங்களை நிழலில் நிறுத்தி வைத்திருப்பவர்கள் பயப்பட தேவையில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து