முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வதேராவுக்கு விதிகளை மீறி சலுகை காட்டிய அரியானா

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

சண்டிகர் - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு முறைகேடான வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை குழு ( சிஏஜி), அரியானா அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அரியானா மாநில சட்டசபையில் கடந்த 2013-14ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு முறைகேடான வழிகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கைலைன் நிறுவனம் வதேராவுக்குச் சொந்தமானதாகும். அரசு நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது, நிலத்தின் மதிப்பில் 15 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கும் நிகர லாபத்தை அரசுக் கருவூலத்திலேயே ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை அரியானா அரசு கொண்டு வரவில்லை.

குர்கான் மாவட்டத்தில் பிரதான இடத்தில் இருந்த 3.5 ஏக்கர் நிலத்தை ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தது. வெறும் ரூ.7.5 கோடிக்கு அரியானா அரசிடம் வாங்கிய அந்த நிலத்தை ரூ.58 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம் ஸ்கைலைன் நிறுவனத்துக்கு ரூ.50.5 கோடி லாபமாகக் கிடைத்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இதுபோல விற்பனை செய்து மொத்தமாக ரூ. 267.47 கோடியை ஈட்டியுள்ளனர்.

ஆனால் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வரியை உரிய முறையில் செலுத்தாமல் விட்டுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. சிஏஜி தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், குடியிருப்புகளை அமைக்கும் உரிமங்களை வழங்குவதில் அரியானா அரசு மேலும் தெளிவான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து