முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி ஆலைகளில் தினமும் ரூ.200 கோடி கறுப்புபணம்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி -  அரிசி ஆலைகளில் தினமும் ரூ. 200 கோடி அளவுக்கு கறுப்பு பணம் நடமாடுவதாக கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது. மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து மத்திய தொகுப்புக்கு வழங்கி வருகிறது.  நெல் அதிகமாக பயிரிடப்படும் ஆந்திரா, பஞ்சாப், சத்தீஷ்கர், உத்தரபிரதேசம், ஒடிசா, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள்தான் மத்திய தொகுப்புக்கு அதிகளவு நெல் வழங்கி வருகிறது.

நெல் கொள்முதல் விலை நிர்ணயம் செய்தல், அவற்றை அரிசி ஆலைகளுக்கு சப்ளை செய்தல் போன்றவற்றில் பெருமளவில்  ஊழல் நடப்பதாக ஒடிசாவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்டம் ஆர்வலர் கவுரி சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். தனது குற்றச்சாட்டை அவர் கடந்த 2012ல் மத்திய கணக்கு தணிக்கை துறையின் ஆடிட்டர் ஜெனரலுக்கு புகாராக அனுப்பி இருந்தார்.

பிரதமர் அலுவலகத்திற்கும் புகார் மனு அனுப்பினார். அதனடிப்படையில் மத்திய கணக்கு துறை நெல் கொள்முதல் மற்றும் அரிசி ஆலைகள் பற்றிய கணக்குகளை தணிக்கை செய்யப்பட்டன.
இந்த தணிக்கை அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அரிசி கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள் மற்றும் அரிசி ஆலைகள் இடையேயான நெல் கொள்முதல் உற்பத்தி மற்றும் விற்பனை போன்றவற்றில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 கோடி அளவுக்கு கருப்பு பணம் புழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி கௌரிசங்கர் ஜெயின் கூறியதாவது,

நெல்கொள்முதலில் தவறான கொள்கை கணக்குகள் மற்றும் பில்லிங் செய்தல் போன்றவற்றில்தான் அதிக அளவில் குளறுபடிகள் நடப்பதாக தெரியவருகிறது. நெல் கொள்முதல் விலையுடன் கூலியை சேர்க்கும் போது இருமடங்கு விலையாக காண்பிக்கப்படுகிறது. 2004-2005 ம் ஆண்டுகளில் இருந்த விலையையே அரசி ஆலைகள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் இதில் ரூபாய் 10லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து