முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2வது அரையிறுதி: ஆஸ்திரேலியா வெற்றி

வியாழக்கிழமை, 26 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் வார்னர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 15 ஆக இருந்தபோது வார்னர் யாதவ் பந்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு பின்ச் மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

இந்த ஜோடி ஜோடியில் 3-வது வீரராக களமிறங்கிய ஸ்மித் அபாரமாக ஆடி சதத்தை கடந்தார் அவர் 105 ரன்களுக்கு யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்ச் 82 ரன்களிலும் அடுத்து வந்த வீரர்கள் சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 328 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 47-வது ஓவரின் கடைசி பந்தில் 233 ரன்களுக்குச் சுருண்டு 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. உலகக் கோப்பை அரையிறுதிகளில் தோற்காத தனது சாதனையை ஆஸ்திரேலியா தக்க வைத்தது.

இந்திய அணி அபாரமாகத் தொடங்கியது 76 ரன்களுக்கு விக்கெட் இல்லை. ஆனால் அதன் பிறகு தவன் அவுட் ஆக, விராட் கோலி தேவையில்லாமல், கவனமற்று ஒரு புல் ஷாட்டை ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறவே, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து 76/0 என்ற நிலையிலிருந்து 108/4 என்று ஆனது.

அதன் பிறகு ரஹானே, தோனி இணைந்து சற்றே நம்பிக்கை அளிக்கும் விதமாக 70 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 178 ரன்களுக்குச் சென்றது. அதே சமயத்தில் ரஹானே எட்ஜ் கொடுத்து ரிவியூவ் மூலம் வெளியெரியது அணிக்கு மிகவும் சோதனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து விக்கெட்கள் சரிந்த நிலையில் கேப்டன் டோணி மற்றும் நிலைத்து நின்று சிறிது நம்பிக்கை அளித்து வந்தார். ஆனாள் அவருக்கு கம்பேனி கொடுக்க ஒரு பேட்ஸ்மேன்கள் கூட இல்லை. ஆகையால் அவரே ரன்களை அடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

சிறிது அடிக்க ஆரம்பித்த போது அவர் மெக்ஸ்வெல்லின் அருமையான த்ரோ மூலம் ரன் அவுட் ஆனார். அவர் 65 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே இந்திய அணியில் நேற்றைய ஆட்டத்தில் ஒருவரின் அதிகபட்சம் ஸ்கோராகும். 178/4 என்ற நிலையிலிருந்து ரஹானே விக்கெட்டையும் சேர்த்து இந்தியா அடுத்த 6 விக்கெட்டுகளை 55 ரன்களில் இழந்தது.

உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரேயொரு தோல்வி. அது அரையிறுதியாக அமைந்தது. ஏமாற்றமாக இருந்தாலும். இந்திய அணி வருந்துவதற்கு ஒன்றுமில்லை. இந்திய அணிக்கு இது ஒரு நல்ல உலகக்கோப்பை என்றே கருதப்பட வேண்டும். ஆஸ்திரேலிய தரப்பில் பாக்னர் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து