முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சல்மான்கான் கோர்ட்டில் ஆஜர்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - அதிவேகமாக கார் ஓட்டிய வழக்கு தொடர்பாக நடிகர் சல்மான்கான் நேற்று கோர்ட்டில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நடிகர் சல்மான்கான் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி அதிகாலையில் அதிவேகமாக ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் தூங்கி கொண்டிருந்த ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சல்மான்கான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கார் ஓட்டிய போது அவர் போதையில் இருந்ததாக கூறப்பட்டது. இதற்காக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் மீதான வழக்கு விசாரணை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. கார் ஓட்டிய போது சல்மான்கான் டிரைவர் இருக்கையில் இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டதும் அவர் இருக்கை மாறி உட்கார்ந்து கொண்டதாகவும் நேரில் பார்த்த சாட்சிகள் கோர்ட்டில் தெரிவித்தன.

இதை சல்மான்கான் வக்கீல் மறுத்து வாதம் செய்தார். அவர் போதையில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். இந்த வழக்கில் சல்மான்கானிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவரை கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சல்மான்கான் நேற்று கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார். அவை பதிவு செய்யப்பட்டது. சல்மான்கான் மீது 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்க கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து