முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். தீவிரவாத தாக்குதலில் 5 போலீஸார் பலி

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 5 போலீஸார் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் சிச்லூ பகுதியில் போலீஸ் வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீஸார் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மற்றொரு சம்பவத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை பஸ்சில் இருந்து இறக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த இரு சம்பவங்களிலும் மொத்தம் 5 போலீஸார் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து