முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி வீடுகளுக்கு பைப் மூலம் கேஸ் சப்ளை

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - வசதி படைத்தோர் எரிவாயு மானியத்தை துறந்ததால் அரசுக்கு ரூ. 100 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது. இன்னும் 4 ஆண்டுகளில், பைப் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தற்போதுள்ள 27 லட்சம் வீடுகளில் இருந்து ஒரு கோடி வீடுகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது  என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெல்லியில் இதற்கான பிரச்சாரத்தை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,

சிலிண்டர் நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மானியத்தை தவறாக பயன்படுத்துவது பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வசதி படைத்தோர் தாமாகவே முன்வது எரிவாயு மானியத்தை துறக்க வேண்டும். இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் பரப்பப்பட வேண்டும் என்றார்.

இதுவரை 2.8 லட்சம் வாடிக்கையாளர்கள் எரிபொருள் மானியத்தை துறந்துள்ளனர். இதனால், அரசால் ரூ.100 கோடி வரை சேமிக்க முடிந்துள்ளது. எனவே, வசதி படைத்தோ பெருமளவில் முன்வந்து எரிவாயு மானியத்தை துறக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் இத்தருணத்தில் எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா தன்னிறைவு பெறுவது மிகவும் அவசியமானதாகும். இன்னும் 4 ஆண்டுகளில், பைப் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தற்போதுள்ள 27 லட்சம் வீடுகளில் இருந்து ஒரு கோடி வீடுகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து