முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு: மன்மோகன்சிங் மனு மீது 1-ல் விசாரணை

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ சம்மனை எதிர்த்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 1ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. மன்மோகன் சிங்குக்காக ஆஜராகவுள்ள மூத்த வழக்கறிஞர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிசா மாநில தலாபிரா சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா உட்பட 6 பேருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பராக் ஆகியோர் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

மன்மோகன் சிங் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் மனுவை தாக்கல் செய்தனர். மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று எந்த குற்றச்சாட்டும் இல்லை. அரசு சார்பில் முடிவு எடுப்பதை குற்றம் என்று கூற முடியாது என்று அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து