முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இறுதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இறுதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏலம் நடந்ததால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியது. இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து ஏல முறையினை பின்பற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தினாலும் முடிவை சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 19 நாட்களாக நடந்த ஏலம் நிறைவடைந்தது. மொத்தம் 115 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஏலத்தின் முடிவில் மத்திய அரசுக்கு ரூ. 1.10 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி எர்டெல், வோடஃபோன் இண்டியா, டாடா டெலிசர்வீசஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன.
2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த  தடை காரணமாக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. இந்தத் தடையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து