முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முரட்டு கைதி படத்தில் பாவனா

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

bhavana

மலையாளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாவனா, ‘சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ‘தீபாவளி, வெயில் போன்ற படங்கள் கைகொடுத்தாலும், அதன்பின் நடித்த எந்தப் படமும் சரிவர ஓடவில்லை.

அஜித்தின், ‘அசல் படம், வட்டியும் முதலுமாய் தனக்கு வாய்ப்பை அள்ளித் தரும் என் நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. தமிழில் மார்க்கெட் சரிந்ததால், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் தீவிர கவனம் செலுத்தத் துவங்கிய பாவனாவுக்கு, கைமேல் பலனும் கிடைத்தது.

கிட்டத்தட்ட தமிழ் ரசிகர்கள் இவரை மறந்துவிட்ட நிலையில், சுதீப்புடன் நடித்த, ‘பச்சன் கன்னட படம், ‘முரட்டு கைதி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றமாகிறது. ‘நான் யால் சுதீப்புக்கு இங்கு நல்ல மார்க்கெட் நிலவுவதால், இந்தப் படம் தனக்கு புதிய வாசலை திறந்துவிடும் என நினைக்கிறார், பாவனா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து