முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4ம் தேதி சந்திர கிரகணம்: திருப்பதியில் நடையடைப்பு

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதியில் வரும் 4ம் தேதி நடையடைப்பு செய்யப்படுகிறது. இதையொட்டி அன்று நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சந்திர கிரகணம் வரும் 4ம் தேதி வருகிறது. அன்று மாலை 3.45 மணி முதல் இரவு 7.15 மணி வரை கிரகணம் உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது.

இதையொட்டி வழக்கமாக நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்தர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை நிகழ்ச்சியின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்படும். வருடாந்திர வசந்த உற்சவத்தின் கடைசி நாளான அன்று அதிகாலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் வசந்த மண்டபத்தில் ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணி, மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

உற்சவ மூர்த்திகள் 9.30 மணிக்குள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படும் என தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வசந்தோற்சவத்தின் போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக திரள்வது வழக்கம். சந்திர கிரகணத்தையொட்டி சில மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து