முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் கிராமந்தோறும் பசுக்களுக்கு தூய்மையான குடிநீர் தொட்டிகள்

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அரியானா அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து அடுத்த அதிரடியாக ஒவ்வொரு கிராமத்திலும் பசுக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரியானாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை செய்து முதல்வர் மனோகர்லால் கட்டார் அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த சூழலில் டெல்லியில் மத்திய கிராமப்புற வளர்ச்சி துறை இணை அமைச்சர் பிரேந்தர்சிங்கை அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்  சந்தித்து பேசினார்.

அப்போது அரியானாவில் உள்ள கிராமத்தில் பசுக்களுக்கு குடிநீர் தொட்டிகள் கட்டுவது குறித்த திட்டத்தை கூறினார். இதனையடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் பசுக்களுக்கு குடிநீர் தேவைக்காக 3 முதல் 5 குளங்கள் வரை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கட்டார் இது குறித்து கூறுகையில்,

கிராமங்களில் உள்ள குளங்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. கிராமப்புறங்களுக்கும் குடிநீர் வசதி விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இதற்கான வசதிகள் எதுவும் கிடையாது. கழிவுநீர் குடிநீர் குளங்களில் கலப்பதை தடுப்பது மிக பெரிய சவாலாக உள்ளது. பசுக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் வகையில் தொட்டிகள் கட்டப்படும். அதே போல் குளங்களும் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்படும் என்றார். மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறுகையில், அரியானா மாநிலத்தின் குடிநீர் தேவைக்காக ரூ. 42 கோடிக்கும் அதிகமாக நிதி சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து