Idhayam Matrimony

கன்னியாஸ்திரி வழக்கு: மே. வங்க கோரிக்கை நிராகரிப்பு

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா - மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரிய மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் ரனாகட் என்ற இடத்தில் கடந்த வாரம் 14ம்தேதி கும்பல் ஒன்று கான்வென்ட் பள்ளிக்குள் கொள்ளையடிக்க புகுந்தது. இதனை தடுக்க முயன்ற 71 வயது கன்னியாஸ்திரியை அக்கும்பல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாநில சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக 10க்கும் அதிகமானோரை பிடித்து விசாரித்தனர். மேலும் கான்வென்டில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான உருவங்களை கொண்டு குற்றவாளிகளான ஷலீம் ஷேக் என்பவரை மும்பையிலும், பங்களாதேசை சேர்ந்த கோபால் சர்க்கார் என்பவரை வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலும் போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 19ம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கோரிய மம்தா அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க தலைமை செயலக அதிகாரிகள் கூறுகையில், கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கை சிபிஐக்கு அனுப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது என்றனர். சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க மத்திய அரசு மறுப்பது ஏன் என்று மேற்கு வங்க அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து