முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத் தர வரிசை பட்டியலில் புதிய வரலாறு படைத்த சாய்னா

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - உலகத்தரவரிசை பட்டியலில் இந்திய பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவல் முதலிடத்திற்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தார்.

பாட்மின்டனில் சீனாவின் லீ ஷுயரை நம்பர்-1 இடத்தில் இருந்தார். இந்நிலையில், இந்திய ஓபன் பேட்மின்டனில் காயம் காரணமாக அவர் ஆடவில்லை. ஆனால், இந்தியாவின் சாய்னா நேவல் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். அவர் தனது அரையிறுதி ஆட்டத்தில், யுய் ஹசிமோட்டோவை எதிர்கொள்கிறார்.

இதன்காரணமாக, சாய்னா உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அரையிறுதியில் சாய்னா தோற்றாலும்கூட, அவரது இடத்திற்கு ஆபத்து கிடையாது.இந்திய பாட்மின்டன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு வீராங்கனை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து