முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூம்புகார் நடத்தும் கைத்திறன் கண்காட்சி: அமைச்சர் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பூம்புகார் அரசு நிறுவனம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைந்துள்ள மாபெரும் கைத்திறன் கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் மோகன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.வளர்மதி,  எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களின் முதல்வர்  ஜெயலலிதாவின் வழி காட்டுதலின்படி சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்), சென்னை விற்பனை நிலையத்தின் 27–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நடைபெற உள்ள மாபெரும் கைத்திறன் கண் காட்சியினை”  ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  ப.மோகன்  துவக்கி வைத்தார்.  சென்னை மற்றும் மாமல்லபுரம் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் அமைக்கப்பட உள்ள கிராப்ட் கபே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி” கட்டிடங்களை அழகு படுத்து வதற்கான தகவல் தொகுப்பினை மின் திரையின் மூலம் அமைச்சர் ப.மோகன் பார்வையிட்டார்.

அப்போது,  சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர்  பா.வளர்மதி,  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  எஸ்.கோகுல இந்திரா, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மைச் செயலாளர்  ஹர்மந்தர்சிங்,  தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர். சந்தோஷ் பாபு மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை விளக்குகள், தஞ்சை கலைத்தட்டுகள், தஞ்சை ஓவியங்கள், களிமண், கல் மற்றும் காகிதக்கூழ் பொம்மைகள் மற்றும் நூக்கமர மேஜை, நாற்காலிகள், தேக்குமர பூஜை மண்டபங்கள், சணல் பொருட்கள், ருத்ராட்சம், அதிநவீன நகை வகைகள், ஜெய்ப்பூரின் ஓவியங்கள், ஒடிசாவின் பட்டாசித்ரா ஓவியங்கள் மற்றும் மரவேலைப்பாட்டிலான பரிசுப் பொருட்கள், அகர் பத்திகள், வாரணாசியில் தருவிக்கப்பட்ட ஜரிகை துணி வகைகள், ராஜஸ்தான் கைத்தறி படுக்கை விரிப்புகள், லக்னோ சிக்கன் துணி வகைகள், குஜராத் துணி வகைகள், சுரிதார் வகைகள், பளிங்குத்தூள் சிலைகள், சுட்டமண் சிற்பங்கள், பல்வேறு மாநில சிறப்பு செயற்கைக்கல் நகை வகைகளும், முத்து வகைகளும், கைத்திற துணி வகைகளும் இக்கண்காட்சிக்கென சிறப்பாக தரு விக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களிலிருந்தும் 100–க்கும் மேற்பட்ட கை வினைஞர்கள் நேரிடையாக வருகை தந்து தங்களுடைய கைவினைப் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.

இக்கண்காட்சி 27–ந்தேதி (நேற்று) முதல் 31–ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை (ஞாயிறு உட்பட) நடைபெறும். 10 சதவீத தள்ளுபடி இக்கண்காட்சியில் விற்பனை செய்யப் படும் அனைத்து பொருட் களுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படு கிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும். இக்கண்காட்சியின் சிறப்பம்சமாக இந்நிறுவனம் இவ்வாண்டு நடத்திய பல்வேறு விருதுப்போட்டிகளில் கலந்து கொண்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து