முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணை பாதுகாப்பு பணிக்கு 2 புதிய படகுகள்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

தேனி - முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்காக 2 புதிய படகுகள் வாங்கப்பட்டு அதன் வெள்ளோட்டமும் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பொருட்டு பல சட்ட போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்டவர் அதிமுக பொதுச் செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இந்த அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதும் அதற்காக ஜெயலலிதாவுக்கு  பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்ததும் தெரிந்ததே. இருந்தாலும் கேரள அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுக்கு அவ்வப்போது பல இடையூறுகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பெரியாறு அணையின் பாதுகாப்பு பணிக்காக அதாவது ரோந்து பணிக்காக ரூ. ஒரு கோடி செலவில் 2 புதிய படகுகள் தமிழக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு படகின் வெள்ளோட்டம் தேக்கடியில் இருந்து பெரியாறு அணை வரை நேற்று நடத்தப்பட்டது. தமிழக அதிகாரிகள் அதில் பயணம் செய்து பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து