முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது கட்ட போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை சென்னை குரோம்பேட்டையில் நடைபெறுகிறது.

போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த கோரிக்கைகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 11 ந்தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக கடந்த மார்ச்-2 ந்தேதி தொழிற்சங்கங்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 12 ந்தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகளான 240 நாட்கள் பணிபுரிந்தால் நிரந்தரப்படுத்துதல், மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை உயர்த்துதல் போன்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இதற்கிடையில் கடந்த 20 ந்தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் புதிய ஓய்வூதிய முறையை கைவிட்டு பழைய பென்சனை கடைபிடிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டன.

இது குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தை, 30 ந்தேதி தள்ளிவைக்கப்பட்டது. பென்சன் குறித்தும் இறுதிக்கட்டமாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்தும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை. சென்னை குரோம்பேட்டை போக்குவரத்துப்பணிமனையில் நடைபெறுகிறது. இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்களை சேர்ந்த 84 பிரதிநிதிகளும் நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளும் போக்குவரத்து மேலாண் இயக்குனர்களும் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து