முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த சிங்கப்பூரின் தந்தைக்கு கொட்டும் மழையில் மக்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் - மறைந்த சிங்கப்பூரின் தந்தைக்கு கொட்டும் மழையிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்ட லீ குவான் யூவ் நிமோனியாவால் கடந்த 23ம் தேதி மரணம் அடைந்தார். 91 வயதில் மரணம் அடைந்த அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன.

முன்னதாக யூவின் மரணச் செய்தி அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,

தலைவர்களிடையே லீ ஒரு சிங்கம், தொலைநோக்கு பார்வை உள்ள அரசியல் தலைவர். அவரது வாழ்க்கை அனைவருக்கும் பல அரிய பாடங்களை கற்பித்துள்ளது. அவரது மரணச் செய்தியை கேட்டு கவலை அடைந்தேன் என்று தெரிவித்தார்.

யூவின் இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், தென் கொரிய அதிபர் பார்க் ஜியூன் ஹை, ஆஸ்திரேலிய பிரதமர் டோன் அப்பாட், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ மற்றும் மலேசிய அரசர் அப்துல் ஹலீம் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகரத்தினத்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது லீ குவான் யூ வகுத்த பாதையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் தயாராக இருப்பதாக சண்முகரத்தினம் தெரிவித்தார் சண்முகரத்தினம்.

மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம், தூய்மை ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்வதாகவும், அதற்கு லீ குவான் யூதான் காரணம் என்றும் மோடி புகழாரம் சூட்டினார். அதன் பின்னர் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் கோ சோக் டாங் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல இஸ்ரேல் அதிபர் ரூவின் ரிவ்லின், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் இரு நாட்டு ஒத்துழைப்பு கூட்டுச் செயல்பாடு குறித்துப் பேசினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து