முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015 உலகக் கோப்பை: 5-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் - உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. உலக கோப்பை இறுதி போட்டியில், முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே ஆரோன் பின்ச் விக்கெட்டை டக் அவுட்டில் இழந்தாலும், கேப்டன் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் தயவால் அதிரடியாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆகியது.

முன்னதாக, உலக கோப்பை பைனலில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து அணி உலக கோப்பை பைனலை, பதற்றத்தோடு ஆட ஆரம்பித்ததன் விளைவு, முதல் ஓவரிலேயே அதிரடி வீரரும், அந்த அணி கேப்டனுமான மெக்கல்லத்தை இழந்தது. எனவே, மார்டின் கப்திலும், வில்லியம்சனும் நிதானமாக ஆட ஆரம்பித்தனர். எனவே, முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆதிக்கமே இருந்தது.

10 ஓவர்களில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகும், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 33ஆக இருந்தபோது மார்டின் கப்திலும் (15 ரன்), 12.2 ஓவர்களில் ஸ்கோர் 39ஆக இருந்தபோது, வில்லியம்சனும் (12 ரன்) அவுட் ஆகினர். கப்திலை மேக்ஸ்வெல் பௌல்ட் செய்தார். வில்லியம்சன், ஜான்சன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.

இதனால் நியூசிலாந்து தடுமாற்றமடைந்தது. டைலரும், எலியட்டும் நிதான ஆட்டத்தால் அதை சரிகட்ட முயன்றனர். இருவரும் 69 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். ஆட்டத்தின் பாதியான 25 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்திருந்தது. இதன்பிறகு சற்று வேகம் பிடித்த பேட்டிங் 35 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. அப்போது, டைலர்-எலியட் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கடந்தது.

ஆனால், அடுத்த ஓவரிலேயே, டைலர் 40 ரன்களில் நடையை கட்டினார். அதே ஓவரிலேயே கோரி ஆண்டர்சனும் டக் அவுட் ஆனார். இதற்கடுத்த ஓவரில் ரோன்ச் டக் அவுட் ஆனார். 150 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் பவர் பிளேயை ஆரம்பித்த நியூசிலாந்து 151 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது.
இதனிடையே சிறிது நேரம் நின்ற டேனியல் வெட்டோரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் பந்தில் பௌல்ட் ஆனார். பொறுத்து பார்த்த எலியட்டும் 83 ரன்களில் அவுட் ஆனார்.

171 ரன்களுக்கு 8 விக்கெ்ட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாநதை அதன்பிறகு எழவிடவில்லை ஆஸ்திரேலியா. மேட் ஹென்ட்ரி டக் அவுட் ஆன நிலையில், 11 ரன்கள் எடுத்திருந்த டிம் சவுத்தியை அருமையாக ரன் அவுட்செய்தார் மேக்ஸ்வெல். இதனால் 45 ஓவர்களிலேயே நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸ்திரேலியா விரட்டலை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 1.4 ஓவர்களில் 2 ரன்களாக இருந்தபோது, ஆரோன் பின்ச், டரெண்ட் பவுல்ட் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணியினரும், ரசிகர்களும், கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியை வார்னர் நீடிக்கவிடவில்லை. தனது வழக்கமான அதிரடியால் நியூசிலாந்து பந்து வீச்சை திணறடித்தார்.இதனால் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது.
 
வார்னர் 40 ரன்களுடனும், ஸ்மித் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 45 ரன்களில், ஹென்ட்ரி பவுன்சரில், எலியட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 12.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 63 ரன்களை எடுத்திருந்தது. எனவே நியூசிலாந்து மீண்டும் ஆட்டத்திற்குள் வர வாய்ப்பு கிடைத்தது.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இதைத் தொடர்ந்து களமிறங்கினார். முதலில் சிறிது பதற்றத்தோடு ஆடிய கிளார்க், பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே நியூசிலாந்தால் ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள்ளாக்க முடியவில்லை. 29 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 151 ரன்களை எடுத்திருந்தது.

வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, 74 ரன்கள் எடுத்திருந்த கிளார்க் ஹென்ட்ரி பந்தில் பௌல்ட் ஆகினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக கைதட்டலுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை கொடுத்தனுப்பினர். கிளார்க் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியா 175 ரன்களை எடுத்து வெற்றியை நெருங்கியிருந்தது. வாட்சனும், ஸ்மித்தும் இணைந்து 33.1 ஓவரில், வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் இப்போட்டியிலும் அருமையாக ஆடி 56 ரன்களுடனும், வாட்சன் 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். நியூசிலாந்து தரப்பில் ஹென்ட்ரி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலியா 5-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து