Idhayam Matrimony

ராகுல் காந்தி விரைவில் திரும்புவார்: சோனியா

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

அமேதி - ஒய்வெடுக்கச் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் திரும்புவார் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உளஅள ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகலை சோனியா காந்தி, சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ரேபரேலி, அமேதி தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். அவர்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதனை நாங்கள் தீர்த்து வைப்போம். நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரம் தொடர்பாக அரசுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ராகுல் காந்தி ஓய்வெடுப்பதற்காகச் சென்றுள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்றார் சோனியா காந்தி.

முன்னதாக, தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் உள்ள பச்வார், பந்திப்பூர், சிவ்புரி ஆகிய கிராமங்களுக்கு சோனியா காந்தி சென்றார். அங்கு அவரபிடம், திடீர் மழையால் கோதுமை, கடுகு ஆகிய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறையிட்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்ட சோனியா காந்தி, சம்பந்தப் பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு அதைக் கொண்டு சென்று, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி செய்ததா? என சோனியா காந்தி கேட்டார். அதற்கு அவர்கள், மத்திய அரசின் உதவிகள் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால் உத்தரப் பிரதேச அரசு அறிவித்த உதவி இன்னமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பிறகு சர்வோதயா, உதர்பாரா கிராமங்களுக்குச் சென்ற சோனியா காந்தி, அண்மையில் ரயில் விபத்தில் உயிரிழந்த சிவேந்திர சிங், சிட்ல பிரசாத் மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல், ரயில் விபத்தில் காலை இந்த 14 வயது சுறுவன் தனஞ்சய் என்பவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் சோனியா காந்தி. அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து