முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியரைத் தாக்கிய அமெரிக்க அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்காவிலுள்ள மேடிஸன் நகரில், இந்தியர் தாக்கப்பட்டது தொடர்பாக, காவல் துறை அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேசிஸன் நகரில், கடந்த மாதம் சுரேஷ் பாய் படேல் என்ற இந்தியர், நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காவல் துறை அதிகாரி எரிக் பார்க்கர் என்பவர், சுரேஷ் பாய் படேலைக் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ  விசாரித்து வந்தது. சில நாள்களுக்குப் பின்னர். எரிக் பார்க்கர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். எரிக் பார்க்கரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று மேடிஸன் காவல் துறை, கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில், துணை அட்டர்னி ஜெனரல் வனிதா குப்தாவும், வடக்கு அலபாமா மாவட்டத்தின் அமெரிக்க அட்டர்னி ஜாய்ஸ் வான்சும் கூறியதாவது:

முடக்குவாத நிலைக்க தள்ளப்படும் அளவுக்கு சுரேஷ் பாய் படேல் தாக்கப்பட்டது தொடர்பாக எரிக் பார்க்கர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் சட்டத்தை நிலைநித்தவும், பொது மக்களை காக்க வேண்டியுமே பதவியேற்கின்றனர். காவல் துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். சட்டத்தை மீறி, மனித உரிமைகளை பாதிக்கும் அளவுக்கு தங்களது பலத்தை பிரயோகிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சுரேஷ் பாய் படேல் தாக்கப்பட்டது தொடர்பாக, அலபாமா ஆளுநர் ராபர்ட் பென்ட்லி, இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியிருந்தார். எரிக் பார்க்கர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டுகல் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து