முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் ஆம்ஆத்மி, ஐ.ஜ.தளம் ஓரணியாக செயல்பட முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளில் பாராளுமன்றத்தில் ஓரணியாகச் செயல்பட ஆம் ஆத்மியும் ஐக்கிய ஜனதா தளமும் முடிவு செய்துள்ளன. பீகார்  முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது ஐக்கிய ஜனதா தளமும் ஆம் ஆத்மியும் இணைந்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறுகையில்,

டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி அரசு கோரி வருகிறது. அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். பாஜகவுக்கு எதிராக இருகட்சிகளும் இணைந்து செயல்படும். நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளும் ஓரணியாகச் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது பீகார் அரசியல் குழப்பத்தின் போது ஐக்கிய ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததற்கு நிதிஷ் நன்றி கூறினார். பின்னர் திகார் சிறையில் உள்ள தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து