முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தக்காட்சியில் லட்சுமி மேனன்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

lakshmi menon

‘கும்கி’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பதிந்த லட்சுமிமேனன், ‘சுந்தரபாண்டியன், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்துள்ள, ‘கொம்பன், சிப்பாய்’ படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.


ஹோம்லியான கேரக்டர்களில் நடித்துவந்த லட்சுமி மேனன், ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் விஷாலுடன் முத்தக்காட்சியில் நடித்தது பெரும் பரபரப்பையும் இருவரை இணைத்து கிசுகிசுவும் கிளப்பியது. இந்நிலையில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வை காரணம் காட்டி, புதுப்படங்களில் ஒப்பந்தமாவதை அவர் தள்ளிப்போட்டு வருகிறார்.

‘பரவாயில்லை தேர்வு முடியும்வரை வெயிட் பண்றோம்’ என ஒருசில தயாரிப்பாளர்கள் கேட்கத் துவங்கியதும், அதற்கும் பிடிகொடுக்காமல் நழுவுகிறார். இது, மீண்டும் பழைய கிசுகிசுவை துசு தட்ட வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து