முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்காக கெயில் திட்டத்தையே நிறுத்தியவர் ஜெயலலிதா

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - விவசாயிகளுக்காக கெயில் திட்டத்தையே நிறுத்தியவர் ஜெயலலிதா என்று சட்டபேரவையில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசினார். தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அளித்த பதில் வருமாறு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலே கோகோ கோலா நிறுவனம் அமைவது பற்றிய சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார்கள். அந்த கோக்கோ கோலா நிறுவனம் இன்னும் அனுமதி கேட்டு சுற்றுச்சூழல் துறைக்கு இன்னும் விண்ணப்பிக்கப்படவில்லை. மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படுகின்ற இந்த அரசு என்றைக்கும் மக்களையும் விவசாயிகளையும் பாதிக்கக்கூடிய எந்த திட்டங்களையும் நடைமுறை படுத்துவதில்லை என்பதற்கு உதாரணமாக கடந்த காலத்திலேயே மத்திய அரசின் துணையோடு கெயில் நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்திய போது ""மக்களுக்காக தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்று அறிவித்து அந்த திட்டத்தையே விவசாயிகளுக்கு ஆதரவாக நிறுத்தி வைத்த முதல்வர் மாண்புமிகு மக்களின் முதல்வர் இதயதெடீநுவம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆகவே அந்த கோக்கோ கோலா நிறுவனம் அமைகிறபொழுது விவசாயிகளையோ, மக்களையோ பாதிப்படையச்செய்யக்கூடிய எந்த விதமான அம்சங்கள் அதில் இருந்தால், மக்களின் முதல்வர் ஜெயலலிதா மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து