முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நெசவாளர்கள் சிகிச்சை பெற வசதி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன் பெறலாம் என்று அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் உறுப்பினர் அண்ணாதுரைக்கு அளித்த பதில் : தமிழகத்தில்19 மாவட்டங்களில் நெசவாளர்களுக்கு 100 சதவீதம் அளவுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 1 லட்சத்து 45 ஆயிரம் நெசவாளர்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒருவேளை ஸ்மார்ட் கார்டுகள் வழங்காமல் விடுபட்டிருந்தால் அங்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் நெசவாளர்கள் சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் 175 மருத்துவமனைகளில் நெசவாளர்கள் சிகிச்சை பெற வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நெசவாளர்களின் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ரூ 37, 500 முதலமைச்சரின் விரிவான காப்புரிமைத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை ரூ 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். நெசவாளர்கள் ஏற்கனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்புரிமை திட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நெசவாளர்களுக்கான சிறப்பு காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலும் நிதி அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் மக்களின் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் கோகுல இந்திரா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து