முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு: அமைச்சர் உறுதி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - உரிய ஆவணங்களோடு விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், ஒரே வீட்டில் பல குடும்பங்கள் குடியிருக்கின்றன. அந்த குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் மறுக்கப்படுவதாக கூறினார். அவருக்கு பதிலளித்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

தமிழகத்தில் 11 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 3.58 போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் 1.97 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. புதிய அட்டைகள் பெறத் தகுதி இருந்தால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ரேஷன் அட்டை தரப்படுகிறது.
ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனியாக சமையல் அறை வைத்திருந்தால், தனிக் குடும்பத்துக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous March 31, 13:24

    மாண்புமிகு அமைச்சர் அவர்களே , எனது வீட்டில் எனது அம்மா சமைத்த பின் என் மனைவி எங்களுக்கு தனியாக சமைத்து போடுவார்கள் . எங்கள் வீடு சிறிய இடம் என்பதால் சமையல் அடுப்படி இன்னொன்று கட்டுவதற்கு இட வசதியும் ,மற்றும் பண வசதியும் இல்லை. .நிலைமை இப்படியிருக்க, எங்களுக்கு ரேஷன் கார்டு அதோ கதிதானா ? 2016 -ல் தேர்தலில் நாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விடுமா ?

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து