முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் பசுவைத் தடைச் சட்டம்: மத்திய அரசு திட்டம்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

இந்தூர் - நாடு முழுவதும் ஒருமித்த கருத்துடன், பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெறஅற சமண மத நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:
இந்த நாட்டில் பசுவதையை ஏற்றுக் கொள்ள முடியாது. பசுவதைத் தடைச் சட்டம் குறித்து ஒருமித்தக் கருத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

எங்களின் முயற்சி குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். பாஜக ஆளும் மத்தியப் பிரதேச அரசும், மகாராஷ்டிர அரசும் இது தொடர்பாக சட்டம் கொண்டு வந்துள்ளன. முந்தைய பாஜக ஆட்சியில் நான் விவசாயத் துறை அமைச்சராக இருந்தபோது, பசுவதையை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய மசோதா கொண்டு வந்தேன். ஆனால், பாராளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால், அதை நிறைவேற்ற முடியாமல் போனது என்றார் ராஜ்நாத் சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து