முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயம் ரவியுடன் புதிய கெமிஸ்ட்ரி திரிஷா

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

trisha

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னரும் தனக்கான இடத்தை தக்கவைத்திருப்பர் த்ரிஷா. இடையில் சில வேகத்தடைகள் வந்தாலும், ஒரே படத்தின் மூலம் அவற்றை தாண்டிச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மூலம் பாய்ந்த த்ரிஷா, தற்போது, ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் மீண்டும் அதை செயல்படுத்திக் காட்டியுள்ளார்.


இத்தனை அழகை எங்கே வைத்திருந்தார் என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு, லேசாக உடல் எடையை ஏற்றி, திக்குமுக்காட வைத்த த்ரிஷா, சுராஜ் இயக்கும், ‘அப்பாடக்கர்’ படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் அவரது உடல்வாகும், பொலிவும் இன்னும் கூடுதலாக இருக்கிறது.


‘உனக்கும் எனக்கும், பூலோகம்’ படங்களைத் தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், இந்த ஜோடியின் நெருக்கம் சிறப்பாக வந்திருக்கிறதாம். போதாக்குறைக்கு இந்தப் படத்தில் அஞ்சலியும் இருக்கிறார். கிளாமரில் சக ஹீரோயினை விட்டுக்கொடுத்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் த்ரிஷா, ‘அப்பாடக்கர்’ரில், ஹாட்டாக நடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து