முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான், நானாக இருக்கவே விரும்புகிறேன் சஞ்சனா சிங்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

sanjana singh

‘ரேனிகுண்டா’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சஞ்சனா சிங், அதன்பின், பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான மீகாமன் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்பைப் பெற்றது.


தற்போது, அரை டஜனுக்கும் அதிகமான தமிழ்ப் படங்களில் நடித்துவரும் சஞ்சனா, பாலிவுட்டிலும் காலடி எடுத்துவைத்தார். இருப்பினும், தமிழில் தனக்கான இடத்தை உருவாக்குவதே லட்சியம் எனச் சொல்லும் சஞ்சனா, சவாலான கேரக்டர்களுக்காக காத்திருக்கிறார்.


இடையே, இவர் நமீதா இடத்தைப் பிடிக்க நினைக்கிறார் என எவரோ கொளுத்திப்போட, ‘நான், யாருடைய இடத்தையும் பிடிக்க நினைக்கவில்லை. நான், நானாக இருக்கவே விரும்புகிறேன்.

அந்த இடத்தை உருவாக்கவே பாடுபடுகிறேன். அதுதான் நிலைக்கும்’ என பதிலடி தந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து