முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடம் பொருள் ஏவல்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

vijay sethupathi

சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘தென்மேற்கு பருவக் காற்று’வைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும், ‘நீர்ப்பறவை’யைத் தொடர்ந்து விஷ்ணுவும், சீனு ராமசாமியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.


இந்தப் படத்தின் கதை குறித்து, சமீபத்தில் வெளியான தகவல் ஒன்று, சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாகப்பட்டது, இது, மதுரையில் நடந்த பொட்டு சுரேஸின் கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதே அது.

இதற்கு பதில் சொல்லும் சீனு ராமசாமி, ‘இது, மதுரையைச் சேர்ந்த கூலிப்படை சம்பந்தப்பட்ட கதை. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு, நான் திரைக்கதை, வசனம் எழுதி உள்ளேன்.

மற்றபடி எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து