முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் சரக்கு கட்டணம் இன்று முதல் உயர்கிறது

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக உயர்கிறது. இன்று முதல் இது அமலாகிறது. சரக்கு கட்டணமும் 10 சதவீரம் அதிகரிக்கிறது. ரயில் சரக்கு கட்டணம் 10 சதவீதமும், நிலக்கரிக்கான கட்டணம் 6.3 சதவீதம் உயரும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. கட்டண அதிகரிப்பு மூலம் உணவுதானியங்கள், பருப்பு வகைகள், யூரியா, இரும்பு, உருக்கு பொருட்கள், சிமெண்ட் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும். வருவாயை உயர்த்தும் வகையில் ரயில்வே சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களை பயன்படுத்துவதற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுவந்தது.

இன்று முதல் இக்கட்டணம் 10 ரூபாயாக உயரும். பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிளாட்பார கட்டண உயர்வு பற்றி இதுவரை எங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஆனாலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுவிட்டதால், இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து