முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டலேறு அணையிலிருந்து உடனே தண்ணீரை திறக்கக்கோரி ஓ.பி.எஸ் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் உள்ள நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் கண்டலேறு அணையிலிருந்து உடனே தண்ணீர் திறந்து விட உத்தரவிடுங்கள் என்று கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் வருமாறு,

சென்னை நகருக்கு கிருஷ்ணா நீரை உடனடியாக திறந்து விடும் விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். கொடிய கோடை காலம் வெகுவாக நெருங்கிவிட்டது. அதனால் சென்னையிலுள்ள நீர் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே கண்டலேறு அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு உங்களை கேட்டு கொள்கிறேன். தமிழ் நாட்டிலுள்ள ஜிரோபாய்ன்ட்டுக்கு குறைந்த பட்சம் இரண்டு டிஎம்சி தண்ணீரையாவது திறந்து விட வேண்டும்.

கடந்த 20.09.2014ல் தாங்கள் எழுதிய கடிதத்திற்கு இணங்க தமிழக அரசு தெலுங்கு கங்கை திட்டத்தின் செலவுக்காக 25 கோடியை ஒதுக்கியது. அந்த தொகை 43 வது இணைப்பு குழு கூட்டத்தில் 28.01.2015 அன்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் அடுத்த தவணையான 25 கோடியையும் தமிழக அரசு வழங்க இருக்கிறது. 43 வது இணைப்புக்குழு கூட்டத்தில் 3டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. அதை ஆந்திர அரசும் ஏற்றுகொண்டது. ஆனால் 1.34டிஎம்சி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டது. அதற்கு பிறகு தமிழக எல்லைக்கு தண்ணீர் வரவே இல்லை.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படவேண்டும்  ஆனால் எங்களுக்கு கிடைத்ததோ 1.74 டிஎம்சிதான் எனவே, கண்டலேறு அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுகொள்கிறேன். குறைந்த பட்சம் 2 டிஎம்சி தண்ணீராவது தமிழகத்திற்கு ஏப்ரல் மாதம் வரவேண்டும். எனவே உடனடியாக தண்ணீரை திறந்த விடவேண்டும். அவ்வாறு திறந்து விடப்பட்டால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன். இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து