முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசை பட்டியல் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

துபாய் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பேட்ஸ்மென் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் முறையே 4 மற்றும் 6-வது இடங்களைப் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மென்களுக்கான பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்திலுள்ளார்.

உலகக் கோப்பைக்கு முன்னாலும் அவர் 4-வது இடத்தில்தான் இருந்தார்.  மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவன், 6-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்தில் உள்ளார். இவர்களைத் தவிர, உலகக் கோப்பையில் மொத்தம் 330 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் ரோஹித் சர்மா 7 இடங்கள் முன்னேறி, 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் அணிகள் தரவரிசையில் உலக கோப்பை சாம்பியன் அணி ஆஸ்திரேலியா முதலிடத்திலும், அரையிறுதி வரை முன்னேறிய இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்காக முறையே 1,75,000 அமெரிக்க டாலர்களும், 75,000 அமெரிக்க டாலர்களும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளன. ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் முதல்முறையாக, முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலகக் கோப்பையில் ஸ்டார்க் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, உமேஷ் யாதவ் முதல் முறையாக முதல் 20 இடங்களில் நுழைந்துள்ளார். உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய யாதவ், 16 இடங்கள் முன்னேறி, தற்போது 18-வது இடத்தில் உள்ளார்.
 
ஒருநாள் பேட்ஸ்மென்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். முதலிடத்தில் 900 புள்ளிகளை டி வில்லியர்ஸ் கடந்துள்ளார். தரவரிசையில் பேட்ஸ்மென் ஒருவர் 900 புள்ளிகளை கடப்பது தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து