முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மந்திரி தாசரி நாராயணராவின் ரூ.2 கோடி சொத்து முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

நகரி - ஆந்திராவைச் சேர்ந்த பிரபல இயக்குனரும், நடிகருமான சாசரி நாராயணராவ் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் மன் மோகன்சிங் மந்திரி சபையில் நிலக்கரி துறை இணை மந்திரியாக இருந்த அவர் மீது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

ஜிந்தால் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்க உரிமையை ஒதுக்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக ஜிந்தால் நிறுவனம் தாசரி நாராயணராவ் இயக்குனராக இருந்த கவுபாக்கிய மீடியா நிறுவனத்துக்கு ரூ.2.25 கோடி வழங்கியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கை யின் அடிப்படையில் தாசரி நாராயணனின் சவுபாக்கியா மீடியா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறை முடக்கி உள்ளது.

இதில் சவுபாக்கியா மீடியா நிறுவன குடியிருப்பு மாளிகை, ரூ.50 லட்சம் பிக்சட் டெபாசிட், 2 கார்கள் அடங்கும். இது பற்றி தாசரி நாராயணன் கூறும்போது, சவுபாக்கியா மீடியா நிறுவனத்துக்கு நான் பங்கு தாரராக மட்டுமே உள்ளேன் அதன் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துரை தற்காலிகமாக ஜப்தி செய்து இருப்பதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து