முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் 6 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு: பிரதமர் அவசர ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

ரியாத் - உள்நாட்டு போர் நடைபெறும் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய மற்றும் அதன் 10 நட்பு நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பத்டடமான சூழ்நிலை நலவுகிறது. எனவே, அங்கு தங்கியிருக்கும் வெளியாட்டினர் வெளியேறி வருகிறார்கள். பாகிஸ்தான் தங்கள் நாட்டு மக்கல் 500க்கும் மேற்பட்டவர்களை விமானங்கல் மூலம் அழைத்து சென்றது. ஏமனில் 6 ஆயிரம் இந்தியர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர். அவர்களில் 96 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அங்கு 4 ஆயிரம் பேர் தகுந்த ஆவணங்களுடன் இருக்கின்றனர். 2 ஆயிரம் பேர் ஆவணங்கள் ஏதுமின்றி தங்கியுள்ளனர்.

தற்போது போர் நடைபெறும் வேளையில் அங்கு அவர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தலைநகர் சனா மற்றும் ஏமனில் இந்தியர்கள் தங்கியுள்ளனர். அவர்களை விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் மீட்க திட்டமிட்டுள்ளது. கொச்சியில் இருந்து 2 கப்பல்கள் விரைந்துள்ளன. இந்திய போர் விமானம் ஒன்று டிஜி பவுட்டி நகருக்கு சென்றுள்ளது.

ஏற்கெனவே 500 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் இந்தியா திரும்ப தயாராக உள்ளனர். அதே நேரத்தில் ஏர்- இந்தியா நிறுவனம் மஸ்கட்டில் 2 விமானங்கலை கூடுதலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா என்ற ரோந்து கப்பலும் பயணிகலை ஏற்றி வர தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் மீட்டு அழைத்து வர திட்டமிட்டப் பட்டிருந்தது. தற்போது  ரோடுகளிலும், வீதிகளிலும் ஒவ்வொருவரும் துப்பாக்கிகளுடன் சுற்றி திரிகிறார்கள். இதனால் பொது மக்கள் வெளியே வர முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, அவர்களை வேறு வழியில் வெளியேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு சவுதி அரேபியாவின் உதவியை நாடியுள்ளது. ஏனெனில் போர் மேகம் சூழ்ந்துள்ள ஏமனில் வான்வெளி தற்போது அதன் கட்டுபாட்டில் உள்ளது. அதை தொடர்ந்து சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லா சிஷ் அல் சவுத்யுடன் பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் பேசினார்.

அப்போது ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்க உதவும்படி அவரிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மன்னர் சல்மான் உதவுவதாக உறுதியளித்தார். அப்போது அவரது முயற்சியால் ஏமனில் ஸ்திரதன்மையும், அமைதியான சூழ்நிலை விரைவில் உருவாகவும் மோடி வாழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து