முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி - ஜோஷிக்கு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உட்பட 20 பேருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் மீது 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கபடாததால், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான கிரிமினல் சதிக் குற்றச்சாட்டை உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரேபரேலி நீதிமன்ற உத்தரவையே கடந்த 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் மனு தாக்கல் செய்தார். இவர் பாபர் மசூதி இடிப்புக்கு எதிரான வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவராவார். இவரே, அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் தனியாக வேறொரு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டை ரத்து செய்த அலகாபாத் நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்குமாறு கோரியிருந்தார். மேலும், மத்தியில் ஆட்சி மாற்றத்தால் சிபிஐ இந்த வழக்கை திசை திருப்ப வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உட்பட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. நோட்டீஸ் மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடந்த 2010 மே மாதம் சிபிஐ ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விவகாரத்தில் அலகாபாத் ஐகோர்ட்டு சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அலகாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வாதங்களுடன் தயாராவதற்கு கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என சிபிஐ நேற்று கோரியது. எனவே கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்ட சி.பி.ஐ.க்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அத்வானி தவிர முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சதீஸ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதாம்பரா, வி.எச். டால்மியா, மஹந்த் அவைத்தியநாத், ஆர்.வி.வேதாந்தி, பரம் ஹன்ஸ் ராம், ராம் சந்திர தாஸ், ஜகதீஷ் முனி மஹராஜ், பி.எல்.சர்மா, நிர்திய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஸ் நகர், மோரேஷ்வர் சாவே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து