முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதித்துறை கட்டிடங்கள் கட்ட ரூ 375 கோடி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - 4 ஆண்டுகளில் நீதிமன்ற கட்டிடங்கள், நீதித்துறையின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் ரூ 375 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் ஒருங்கிணைந்தநீதிமன்றக் கட்டடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள்கட்டுவதற்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் ரூ 9 கோடியே 26 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றக்கட்டடம் மற்றும் குடியிருப்புகள் கட்ட பொதுப்பணித் துறையினரால்ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் இறுதிசெய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படஉள்ளது.

ஜனநாயகத்தின் தூண்களுள், முக்கியத் தூணாக விளங்கும்நீதித்துறையில், நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைந்து முடிக்கும்வகையில், புதிய நீதிமன்றங்களையும், நீதிமன்றங்களுக்குத் தேவையானஉட்கட்டமைப்பு வசதிகளையும், நீதிபதிகளுக்கு தேவையான குடியிருப்புவசதிகளையும், மக்களின் முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில், 375கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீதிமன்ற கட்டடங்கள் மற்றும்குடியிருப்புகள் போன்ற நீதித்துறைக்கான கட்டமைப்பு வசதிகளைஎற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ளவழக்குகளைக் குறைத்திட, 134 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 169 புதியநீதிமன்றங்களை அமைத்திடவும் அம்மாஒப்புதல் வழங்கியுள்ளார்.

2014-15ஆம் நிதியாண்டில் மட்டும், புதிய நீதிமன்றக் கட்டங்கள்,குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க, ரூ 168 கோடியே 22 இலட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார்கள் என்பதைமிகவும் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து