முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் மூலம் பேருந்து முன்பதிவுக்கு 1.30 கோடி பேர் பதிவு செய்து சாதனை

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - அரசு பேருந்துகளில் ஆன்-லைன் முன்பதிவு மூலம், இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பேர் பதிவு செய்து பயன்பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பதிலளிக்கையில் சென்னை-வேளச்சேரி-விஜயநகரம் பகுதியில் புதிதாக ஆன்-லைன் முன்பதிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஆன்-லைன் முன்பதிவு மூலம், இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பேர் பதிவு செய்து பயன்பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் சுமார் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 15 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ப. மோகன், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலும் 90 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் .எடப்பாடி கே.பழனிச்சாமி, சீர்காழி தொகுதியில் வைத்தீஸ்வரன் பேரூராட்சியில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கை பெறப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும் என தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 751 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலகட்டடங்கள், பிரசவ அறைகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து