முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் ஆதாயம் தேடும் திமுக: அமைச்சர் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஒசூரில் தொழிற்பேட்டை அறிவித்தவர்கள் இப்போது அதற்கான பணியை தொடங்கியதும் அரசியலுக்காக எதிர்க்கிறார்கள் என்று திமுக மீது தொழிற்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது திருத்தணியை தொழில் வளம் மிகுந்த பகுதியாக்க வேண்டும் என்று அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ அருண்சுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. தேவையை கருத்தில் கொண்டு தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் இருந்தால் திருத்தணியில் தொழிற்பேட்டை தொடங்க பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த ஆட்சியில் 4 ஆயிரத்து 900 ஏக்கரில் தொழிற்பேட்டை தொடங்க போவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது அந்த இடத்தில் தொழில்பேட்டை தொடங்க முயற்சிகள் மேற்கொண்டால் அடிமாட்டு விலையில் நிலங்களை வாங்க முயற்சிப்பதாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் முழுக்க முழுக்க அரசியல் தான் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து