முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் ஊதியத்தைப் பெற அதன் சங்கத்துக்குத் தடை

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

சென்னை - திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கான ஊதியத்தைப் பெற அதன் சங்கத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஜெ.மதியழகன், ஆர்.மகாலட்சுமி, பி.ஆர்.கண்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நாங்கள் தென் இந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம்.
 
இந்த சங்கத்தில் 1608-கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எங்களுக்கான பணிகள் சங்கத்தின் மூலம் ஒதுக்கப்படும். அதே போன்று, எங்களுக்கான ஊதியத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து பெற்று, எங்களுக்கு சங்கமே வழங்கும், இவ்வாறு வழங்கப்படும் ஊதியத்தில் 10 சதவீதத்தை சங்கம் பிடித்துக் கொள்ளும். ஆனால், இதற்கான ரசீது ஏதும் வழங்கப்படமாட்டாது. இந்தப் பிடித்தம் சட்ட விதிப்படி மேற்கொள்ளப்படுகிறது என நாங்கள் கருதினோம். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. சட்டத்தில் இது போன்று பிடித்தம் செய்வதற்கான வழிகள் ஏதும் இல்லை.

இது தொடர்பாக சங்கக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினால் சங்க அலுவலக அதிகாரிகள் மிரட்டுகின்றனர். மேலும், எங்களுக்கு பணிகள் ஏதும் ஒதுக்கப்படுவதில்லை, எங்களுக்கான ஊதியம் என அதிகளவு தொகையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பெற்றுக் கொண்டு, குறைவான ஊதியமே அளிக்கின்றனர். சங்க உறுப்பினர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய சங்கம், சட்ட விரோதமாக ஊதியத்திலிருந்து 10 சதவீதத் தொகையை எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு பிடித்தம் செய்வதற்கான முறையான காரணங்களும் தெரிவிக்கப்படுவதில்லை.

எனவே, பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கான ஊதியத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திடமிருந்து பெற எங்கள் சங்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், தொழிலாளர் நலச் சட்டத்தை மீறி செயல்படும் சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கான ஊதியத்தை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடமிருந்து பெற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், இந்த மனுவுக்கு ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தொழிலாளர் நலத் துறைக்கும், சினிமா, தொலைக்காட்சிக் கலைஞர்கள், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்கள் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து