முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் தங்கள் துறையின் வளர்ச்சித திட்டச் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக வி.கே.சிங், இந்தர்ஜித் ராவ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றுள்ளனர். கேபினட் அமைச்சர்களைப் போல் இந்த இணை அமைச்சர்களுக்கும் அதிகாரம் இருப்பதால் துறை சார்ந்த திட்டங்களை நேரடியாகச் செயல்படுத்த இவர்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. எனினும், தங்கள் துறை சார்ந்து விவாதங்களின் போது மட்டும் மத்திய அமைச்சரவையில் பங்கேற்க இவர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் மத்திய ஆட்சிக்கு வந்து வரும் மே மாதத்துடன் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஓராண்டை நிறைவு செய்யவுள்ளது. இதையொட்டி, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை மதிப்பிடும் வகையில், அவற்றின் நடவடிக்கைகளை நரேந்திர மோடி மேற்பார்வையிட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகத் தனிப் பொறுப்புடன், கூடிய இணை அமைச்சர்கள் 13 பேரும் தன்னைச் சந்திக்கும்படி அவர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, அனைவரும் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

வி.கே.சிங், இந்தர்ஜித் சிங் ராவ், சந்தோஷ் குமார் கங்குவார், பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், தர்மேந்திர பிரதான், சர்பானந்த சோனவால், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன், மகேஷ் சர்மா, ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர், பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் உடனிருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அலுவலக உயரதிகாரிகள் கூறுகையில், மத்திய ஆட்சிக்கு வந்த போதே அரசின் செயல்பாடுகளுக்கு முழுமையான பொறுப்பை தாமே ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அதன்படி அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளையும் அவர் அவ்வப்போது கவனித்து வருகிறார். இந்நிலையில், தன்னைச் சந்தித்த இணை அமைச்சர்களிடம் அரசு நிர்வாகச் செயல்பாட்டின்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். ஒவ்வொரு அரசுத் துறையிலும் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி இணை அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து