முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை ரூ.49 காசு - டீசல் விலை ரூ.1.21 குறைந்தது

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபடி உள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்தது. பெட்ரோல் விலை 10 முறை குறைக்கப்பட்டது.

இதன் மூலம் பெட்ரோல் விலை ரூ. 17 குறைக்கப்பட்டிருந்தது. அது போல டீசல் விலையும் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு ரூ. 12 அளவுக்கு குறைந்தது. ஆனால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன் பிறகு மார்ச் 1ம் தேதி பெட்ரோல் விலை ரூ. 3.18 அளவுக்கு உயர்த்தப்பட்டது. அது போல டீசல் விலையும் ரூ. 3 உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. அது போல டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சிறப்பாக இருந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 51 காசு குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.31 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து