முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்டர்களை தேர்வு செய்ய மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவத்துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்காக "மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்" அமைக்கப்பட்டுள்ளதாக சட்டபேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார
தமிழக சட்டபேரவையில் அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் குறித்து கவனத்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. திமுக., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த இந்த தீர்மானம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் மருத்துவப்பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. , இதன் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா துறையில் 6,918 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பகம் மூலம் 2,027 மருத்துவ அலுவலர்கள் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தற்காலிக அடிப்படையில் காலமுறை ஊதிய விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவத்துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்காக "மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்" அமைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா துறையில் 6,918 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில், செவிலியர் நியமனம் தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. 7 ஆயிரத்து ,243 செவிலியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் இவ்வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து