முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் அம்மா பேட்டை முருகன் கோயில் புதுப்பிப்பு: அமைச்சர்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஆகம விதிகளுக்கு புறம்பான சேலம் தெற்கு அம்மா பேட்டை குமரகிரி முருகன் கோயில் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் எம்.கே. செல்வராஜ், சேலம் தெற்கு தொகுதியில் உள்ள அம்மா பேட்டை அருள்மிகு குமரகிரி முருகன் கோயில் கும்பாபிசேகம் குறித்து கேட்டார். அதற்கு அமைச்சர் காமராஜ் பதிலளித்து பேசுகையில்: சேலம் தெற்கு தொகுதி அம்மாபேட்டையில் உள்ள கோயில் ஆகமவிதிகளுக்கு புறம்பாக உள்ளது.

ஆகம விதிகளுக்கேற்ப கருவறை, கொடிமரம் கோபுரம் ஆகியவை அமைந்திருக்க வேண்டும். அதற்கு புறம்பான வகையில் இந்த கோயில் அமைந்திருப்பதால் அந்த கோயில் இடிக்கப்பட்டு விதிகளின்படி புதுப்பித்துக்கட்டப்படும். இதற்காக ரூ 1 கோடியே 59 லட்சம் செலவில் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கான நிதி மற்றும் உபயத்தாரர் ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டு , குடமுழக்கு நடத்தப்படும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து