முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மேலும் 4 பேருக்கு தூக்கு தண்டனை

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இத்துடன், மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு பாகிஸ்தான் அரசு விதித்துக் கொண்டிருந்த தடை விலக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் தூக்கிலிடப்படும் கைதிகளின் எண்ணிக்கை 66 ஆனது. பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக், மியான்வாலி, சர்கோதா, ராவல்பிண்டி ஆகிய நகரச் சிறைகளில் இந்த நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சர்வதேச சிறைச் சாலை அமைக்கப்பட்டு 105 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுளஅளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெஷாவர் ராணுவப் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில் 134 மாணவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நிலையைக் கடுமையாக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடையை நீக்கியது. அதனைத் தொடர்ந்து இது வரை 66 பேர் அந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டனர்.

பாகிஸ்தான் சிறைகளில் 8,000 க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உளஅளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஐநா ஐரோப்பிய யூனியன், சர்வதேச மனித் உரிமை அமைப்பு உள்ளிட்டவை பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து